இலங்கை
“பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும், தமிழரும்” நூல் வெளியீடு நாளை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில்….

“பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும், தமிழரும்” கலாபூஷணம் நா.நவநாயகமூர்த்தி எழுதிய நூல் வெளியீட்டு விழா நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை (12/02/2022) காலை 08.30 மணியளவில் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது.
மேலும் குறித்த நூல் ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையுடன் புதிய வருடத்தின் முதல் நிகழ்வாக வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.
ஆய்வார்வலரும், தொல்லியலாளருமான கலΠபூஷணம் நா.நவநாயகமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட ”பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும், தமிழரும்” ஆய்வு நூலானது 359 பக்கங்களை கொண்டதாகவும் அமைந்திருக்கின்றது.