அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்ட ஆங்கில தின போட்டியில் சாதனை!!!

– ம.கிரிசாந்-
திருக்கோவில் வலய, வலய மட்ட ஆங்கில தின போட்டி அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்று, கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய 10 மாணவர்கள் முதலாம் இடத்தினையும் 11 மாணவர்கள் இரண்டாம் இடத்தினையும் 07 மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றிருப்பதுடன் இதில் 21 மாணவர்கள் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியும் உள்ளனர்.
இவ்வாறாக ஆங்கில போட்டிகளில் அதிகளவான மாணவர்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தி மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகி இருப்பது பாடசாலைக்கும் மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.
குறித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், மாணவர்களை போட்டிக்காக தயார் படுத்திய ஆசிரியர்களுக்கும் மேலும் அனைத்து விதமான ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலையின் அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களுக்கும் பிரதேச மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.