உயர்தர பரீட்சைகள் தொடர்பில் மாற்று முடிவு எடுக்கப்பட்டதா?

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜிதவும் பரீட்சைகள் ஒத்திவைப்பது தொடர்பான செய்திகளை மறுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் அல்லது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதைப் போன்று ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.
இது தவறான செய்தியாகும். கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் வழமையைப் போன்று தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே தான் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடப்பரப்புக்கள் எந்தளவிற்கு நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பது மீளாய்வு செய்யப்படுகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் மாத்திரமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதே தவிர பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கான எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.