உலகம்
சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஏழு பேருக்கு ஆபத்து இருப்பது கண்டுபிடிப்பு

ஹாங்காங் நகரில் சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோவெக் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் சுமார் ஏழு பேர் நோய்வாய்ப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து குறித்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் மொத்தம் 18 பேர் கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இது சீனாவின் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சுமார் 91,800 பேரில் 0.019 சதவீதம் பேர் என்று அரசாங்க தரவுகளை மேற்கோளிட்டு சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டது.