ஆலையடிவேம்பு
பயிற்சிக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ள பட்டதாரிகள் மகிழ்ச்சி-ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நான்கு பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை!

வி.சுகிர்தகுமார்
அரச தொழில் வாய்ப்பில் புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறித்து பட்டதாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் இத்தொழில் வாய்ப்பில் இணைத்துக்கொள்ளப்படாத பட்டதாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொழில் வாய்ப்பிற்கான சகல தகுதிகளும் தமக்கிருந்தும் இறுதியாக வழங்கப்பட்ட பட்டதாரி நியமனத்தில் தங்களுக்கும் வழங்கப்படாமைக்கான காரணம் புரியவில்லை எனவும் தெரிவித்தனர்.
இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் நான்கு பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
2014 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்கள்; ஆலையடிவேம்பில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் எடுத்து தங்களுக்கும் தொழில் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.