இலங்கை
சௌபாக்கியா வீட்டுத்தோட்ட விரிவாக்கம் தொடர்பான நாற்று மேடையாளர்களுக்கான பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச செயலகத்தில்….

-ஜே.கே.யதுர்ஷன்-
சௌபாக்கியா வீட்டுத்தோட்ட விரிவாக்கம் தொடர்பான நாற்று மேடையாளர்களுக்கான பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (10.02.2022) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.க.சதிசேகரன், சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளர் திரு.பரமானந்தம், சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு.சசீந்திரன், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கதாகரன், திருமதி.அகிலாராணி ஆகியோரும் விரிவுரையாளர்களாக திரு.ஆர்.யோகநாதன் (நிலையப்பொறுப்பு விவசாய போதனாசிரியர், விவசாய விரிவாக்கல் நிலையம் – தம்பிலுவில்), ஏ.எல். மனாஸர் (விவசாய போதனாசிரியர், விவசாய விரிவாக்கல் நிலையம் – தம்பிலுவில்) ஆகியோரும் மேலும் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளர்களும் கலந்து கொண்டனர்.