திருமண வீட்டுக்கு சென்று குடும்பங்களை உடைப்பது குறித்து பேசிய ரணில்!

திருமண பந்தங்கள் என்பது புதிய பந்தங்களை மற்றும் உறவுகளை இணைக்கச் செய்யப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க திருமண நிகழ்வில் கலந்துகொண்டு குடும்பங்களை உடைப்பது குறித்து பேசியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் மகளின் திருமண நிகழ்வின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இந்த உரையாடலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியதன் மூலம் ஏற்பட்டுள்ள சர்ச்சையை குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, இந்த விவகாரம் ஏதேனும் வெகுதூரம் சென்றால், குடும்பப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும், குடும்பங்கள் பிரிந்து போகக்கூடும் என்று கூறியுள்ளார்.
எனவே இந்த அரசாங்கம் பின்னர் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.