உக்ரேனில் இரவு நேர ரஷ்யத் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 38 பேர் காயம்!

ரஷ்யப் படைகள் கியேவ் மீது இரவு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர்.
மேலும், தாக்குதல் ஏழு மாவட்டங்களில் குடியிருப்பு மற்றும் பிற கட்டிடங்களை சேதப்படுத்தியதாக உக்ரேன் அதிகாரிகள் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.
அதேநேரம் இந்தத் தாக்குதல், இராஜதந்திரத்திற்கு ரஷ்யாவின் பதிலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், அவசர சேவைகள் தீயை அணைத்து, இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, நாடு தழுவிய தாக்குதலில் ரஷ்யா ஏவிய 598 ட்ரோன்களில் 563 மற்றும் 31 ஏவுகணைகளில் 26ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.