உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரை ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவிலில் இருந்து இன்று ஆரம்பமாகியது…..

உகந்தை மலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் இடம்பெறுகின்ற ஆடிவேல் மகோற்சவத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் ஒழுங்குசெய்யப்பட்ட உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான
புனித பாதயாத்திரை ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் ஸ்ரீ வினேஸ்வரர் ஆலயத்தில் இருந்து இன்று (26/07/2023) புதன்கிழமை அதிகாலை 04.00 மணியளவில் ஆரம்பமாகியது.
குறித்த புனித பாதயாத்திரையில் 25 இற்கும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதுடன்
யாத்திரையின் முதலாம் நாளாகிய இன்றைய தினம் திருக்கோவில் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் இரவு தங்குவதற்கும் இருக்கிறார்கள்.
மேலும் இன்றைய தினம் திருக்கோவில் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் மாலை பொழுதில் கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் விசேட கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெற இருக்கிறது.
யாத்திரை செல்லுகின்ற குறித்த குழுவினர் காவி உடை அணிந்து நந்தி கொடி மற்றும் சேவல் கொடி ஏந்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டு பக்தி பூர்வமாக செல்வதனையும் காணக்கூடியதாக இருக்கின்றதுடன் சிறப்பிற்குரிய விடயமாகவும் அமைந்திருக்கிறது.