ஆலையடிவேம்பு
வெள்ளம் பாதித்த இடைத்தங்கல் முகாமிலுள்ள ஆலையடிவேம்பு மக்களுக்கு கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தினர் உதவி!

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நாவற்காடு அதிகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு திரு.கலாநாதன் ரெத்தினம் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கோளாவில் மக்கள் அபிவிருத்தி மைய அமைப்பினரால் ஒருதொகை உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது