அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் செயல்திட்டத்தின் கீழ் வட்டமேசை மாநாடு….

ஜே.கே.யதுர்ஷன்
Search for common ground எனும் நிறுவனத்தின் அனுசரணையுடன் பாதிப்புற்ற பெண்கள் அரங்க நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் செயற்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைப் பெண் உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட வில்கிளப்பினால் 4வது வில்கிளப் அமர்வு 10.30.2021 காலை அம்பாறை மொண்டி ஹோட்டலில் அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் நிறுவனத்தின் தலைமை
Mrs.vaani saiman(Co ordinator.A.W.F) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந் நிகழ்விற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அப்துல் அசீஸ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு உள்ளூராட்சி சபைப் பெண்களிற்கு உரிய சட்டங்கள் மற்றும் உரிமைகள் அவ் உரிமைகளை எவ்வாறு எந்த நேரத்தில் வெளிப்படுத்துவது பற்றிய விளக்கம் வழங்கினார்.மேலும் உள்ளூராட்சி சபைப் பெண்களுக்கும் மற்றும் பெண் சிவில் சமூக அமைப்பினருக்கும் சட்டங்களும் அவர்களுக்கு எழும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகாணுதல் பற்றியும் விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து மதிய நேரம் இரண்டாவது வட்ட மேசை மாநாடானது அம்பாறை மாவட்ட ஊடகவியளாளர்களுக்கும் உள்ளூராட்சி சபைப் பெண்களுக்கும் இடையே நடைபெற்றது. இந் நிகழ்வில் உள்ளூராட்சி சபைப் பெண்களினால் அரசியலில் உள்ளூராட்சி பெண்களினால் அவர்களின் பிரதேசங்களின் அவர்கள் ஆற்றிய சேவைகள் பற்றிய புகைப்படக்கண்காட்சியும் இடம்பெற்றது.
மேலும் இந் கண்காட்சி மூலம் உள்ளூராட்சி சபைப் பெண்களினால் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள் சேவைகள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் மேலும் இவ் வட்டமேசை மாநாடு ஆனது ஊடகவியலாளர்களும் உள்ளூராட்சி பெண்களுக்கிடையிலான நெருங்கிய வலையமைப்பினை கட்டியெழுப்பும் தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது…
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் நிறுவனத்தின் தலைமை mrs.vaani saiman மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் Mr.ACA.Azeez , அம்பாறைமாவட்ட பாதிப்புற்ற பெண்கள் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர்கள் மற்றும் நிறுவன உத்தியோத்தர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் வளவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.