இவ் வருடம் க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள் தொடர்பான Alayadivembuweb.lk இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வு நிறைவு…

இவ் வருடம் சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகும் மாணவர்கள் அவர்கள் படிப்பதற்கு தெரிவு செய்யும் துறை சம்பந்தமாகவும் மற்றும் அவற்றின் பாடத்தெரிவுகள் தொடர்பாகவும் பூரண தெளிவு படுத்துதல் செயலமர்வு ஆனது.
ஆலையடிவேம்புவெப்.எல்கே ( Alayadivembuweb.lk ) இணையத்தளத்தினரின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பங்களிப்புடனும் அக்கரைப்பற்று Pebbles Academy அவர்களின் அனுசரணையுடன்.
நேற்றய தினம் (21. 03. 2021) ஞாயிற்றுக்கிழமை மு.ப 09.00 முதல் பி.ப 12.30 வரையான காலப்பகுதியில் கமு/திகே/ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நடைபெற்றது.
குறித்த செயலமர்வில்,
கலைப்பிரிவு தொடர்பாக வரதராஜ் ஆசிரியர் மற்றும் சட்டக்கல்லூரி மாணவி ஷானிந்தா அவர்கள் இணைந்தும்.
வணியக்கல்வி பிரிவு தொடர்பான விளக்கம் பல்கலைக்கழக மாணவர் டிலோஜன் அவர்களாலும்.
தொழில்நுட்ப கல்வி பிரிவு தொடர்பான விளக்கம் கேசவன் ஆசிரியர் அவர்களாலும்
மேலும் கணித மற்றும் உயிரியல் விஞ்ஞான பிரிவுகள் தொடர்பான விளக்கம் பல்கலைக்கழக மாணவி கிருசாயினி அவர்களாலும்.
மிகவும் சிறந்த முறையில் மாணவர்கள் பயன் பெறக்கூடியதாக தெளிவுபடுத்தல் விளக்கங்களை வழங்கி குறித்த செயலமர்வு இடம்பெற்று இருந்தது.