இலங்கை
இலஞ்சம் பெற்ற அக்கரைப்பற்று வைத்தியசாலை உத்தியோகத்தர் கைது!

இலஞ்சம் பெற்றமை தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் இலஞ்சமகா 10,000 ரூபாவை இன்று (08) பெற்றுக்கொண்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பணியாளர் ஒருவருக்கான கடமைகளை அவர் விரும்பிய பிரிவிற்கு மாற்றி வழங்குவதற்காக சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தரால் 15,000 ரூபா இலஞ்சம் கோரப்பட்டு இன்று 10,000 ரூபாவை பெற்றுக்கொண்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் சந்தேகநபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறினார்.