இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடருக்கான இலங்கை அணி முன்னாதாக அறிவிக்கப்பட்டு சரித் அசலன்க தலைமையிலான அணியில் பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது.
சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணி, தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. எனவே இலங்கை அணி மிகுந்த நம்பிக்கையுடன் இன்றைய போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கான இணையவழி நுழைவுச் சீட்டு விற்பனை கடந்த 04ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்த மூன்று போட்டிகளும் இன்று மற்றும் எதிர்வரும் 13,15 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.



