ஆலையடிவேம்பு
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச வட்டாரத்துக்கான புனரமைப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் சந்திப்பு….

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச வட்டாரத்துக்கான புனரமைப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் சந்திப்பு இன்று (13/03/2022) மாலை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இவ் கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் என்பவர்கள் பங்குபற்றலுடன் ஆக்க பூர்வமான கலந்துரையாடலாக குறித்த நிகழ்வு அமைந்திருந்தது.
மேலும் குறித்த கலந்துரையாடல் சந்திப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.