இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் அக்கரைப்பற்று பகுதிகளில் கொரோன தொடர்பான ஸ்டிக்கர்கள், துண்டுப்பிரசுரங்கள் விழிப்புணர்வு செயட்பாடு…

நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலேயே இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.
இவ்வாறு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டமானது இன்று நண்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்ட காலப்பகுதியில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் கொரோன தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இதேநேரம் கடந்த நாட்களை விட இன்று அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டதுடன் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களும் தேவையான அளவிற்கு சந்தையில் விற்பனைக்காக குவிந்திருந்ததையும் காண முடிந்தது.