அருள்மிகு ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு….

ஈழத்திருநாட்டின் தென்கிழக்கே கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றும் தொன்மைமிக்க பெரும் பதி சங்கமன்கண்டி இலங்கையின் பூர்விகம் குடியினரான நாகர் குலத்து அரசன் “சங்கமன் ” இராசதானி ஆண்ட புண்ணியபூமி மற்றும் காட்டில் வழி தவறியவர்க்கு வழிகாட்டி காட்சியளித்து உணவளித்த தெய்வீகத்தலம் ஆகிய சிறப்பு மிக்கதாக தாண்டியடி அருள்மிகு ஸ்ரீ சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயம் திகழ்ந்து வருகின்றது.
அந்த வகையில் அருள்மிகு ஸ்ரீ தாண்டியடி சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு நேற்றய தினம் (23) காலை 6.30 மணிமுதல் உள்ள சுப நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் சூழ பக்திபூர்வமாக இடம்பெற்றது.
குறித்த ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற இருக்கின்ற நிலையில் ஆலய தலைவர் திரு.கண்ணதாசன் அவர்கள் தலமையில் பாலஸ்தாபன நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் குறித்த ஆலயம் தொன்மை வாய்ந்ததும் சிறப்புமிக்கதுமாக காணப்படுவதுடன் குறித்த பிரதேசத்தின் அடையாளமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இவ் ஆலயத்தின் புனர் நிர்மாண செயற்பாடுகளுக்கு தன்னார்வமாக தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முடிந்தவர்கள் வழங்குமாறு நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.