இலங்கை இராணுவத்தில் 77 வகையான தொழில்சார் துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டு இணைத்துக்கொள்ளபட்டவர்களின் பெற்றோர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு ஆலையடிவேம்பு பிரதேசத்தில்…

வி.சுகிர்தகுமார்
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 49 இளைஞர் யுவதிகளின் பெற்றோர்களும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களின் ஒழுக்கம் பயிற்சி மற்றும் சம்பளம் அவர்களது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.சந்திரபவன் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.சிவநேசன் உள்ளிட்ட வளவாளர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிருவாக உதவியாளர் கணிணி வன்பொருள் உதவியாளர் , வைத்திய உதவியாளர் , தாதி மருந்தகர்,எலக்றீசியன் உள்ளிட்ட 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் இருந்து குறித்த இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நேர்முகப்பரீட்சையில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் வெற்றிடமாகவுள்ள 77 பதவிகளில் அவர்கள் விண்ணப்பித்த பதவிக்கு இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் தலைமைத்துவ பயிற்சி உட்பட் தொழில்சார் பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு பதவிகள் யாவும் ஓய்வூதிய உரித்துடையதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கான சகல சலுகைகளும் வழங்கப்படும்.எனவும் குறைந்த பட்ச திரட்டிய சம்பளம் 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.