GIT பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் நாளை மறுதினம்….

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மண்டபத்தில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (12) காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணிவரை GIT பாட பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு வளவாளர் சதித்ராஜ் அவர்களால் இடம்பெறவுள்ளது.
மேற்படி “GIT” EXAM நான்கு வருடங்களாக பரீட்சை திணைக்களத்தால் நடாத்தப்படாமல் இருந்தது. தற்போது 2019,2020,2021,2022(2023) வருடங்களுக்கான மாணவர்களுக்கான பரீட்சையை நடாத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டு இருந்த நிலையில்.
தற்போது இப்பரீட்சையை பரீட்சை திணைக்களம் எதிர்வரும் (18/03/2023) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.10 வரை நடத்த தீர்மானித்துள்ளது.இதற்கான அனுமதி அட்டைகளும் தற்போது வழங்கப்பட்டு வருகின்ற நிலையில்.
மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச கருத்தரங்கு இடம்பெற இருக்கின்றது. மேலும் இலவசமாக நடாத்தப்படும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் காலை உணவு மற்றும் மதிய உணவுகளை எடுத்துவருமாறும் ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.