திருக்கோவில் பிரதேசத்திற்கு அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ஷ விஜயம்: கரப்பந்தாட்ட மைதானம் திறந்து வைக்கப்பட்டது…

ஜே.கே.யதுர்ஷன்
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்தின் கீழ் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நாடாளாவிய ரீதியில் 335 கிராமிய விளையாட்டு மைத்தானங்கள் அபிவிருத்தி செய்தல் எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (13) அம்பாறை திருக்கோவில் பிரதேச உதயசூரியன் மைதானத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் WD.வீரசிங்க அவர்களின் 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட் கரப்பந்தாட்ட மைதானமானது இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ஷ அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மேலும் இன் நிகழ்வானது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன் உறுப்பினருமான Hon. WD.வீரசிங்க அவர்களின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையிலும் திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் அனுசரனையுடன் இந் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் கெளரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் மைதானத்தை சுற்றிபார்த்ததுடன் அங்கு கலந்து கொண்ட மாணவர்கள் பொது மக்களுடனும் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச செயலாளர் திருக்கோவில் தவிசாளர் மற்றும் உதவித்தவிசாளர்,கட்சி இணைப்பாளர்கள் ,மற்றும் அமைப்பாளர்கள் ,மாணவர்கள், பொதுமக்கள் இளைஞர் அணியினர் ,உதய சூரியன் மைதான உறுப்பினர்கள் ,பொலிஸ் , பாதுகாப்பு படையினர் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.