ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு முன்னாள் பிரதேச செயலாளர் கே.லவநாதன் இன்று இறையடி சேர்ந்தார்.

ஆலையடிவேம்பு முன்னாள் பிரதேச செயலாளர் கே.லவநாதன் 08.04.2021 இன்று மாரடைப்பு காரணமாக மரணமானார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பாலினின்றி உயிரிழந்துள்ளார். இவர் இறுதியாக எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளராக கடமையாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் உடல் இறுதி அஞ்சலிக்காக மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நாளைவைக்கப்படும்.