நாட்டில் நிலவிவரும் பொய்வதந்திகள், வெறுப்புபேச்சு, இனங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் -அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க குழு ஏற்பாட்டில்

வி.சுகிதாகுமார்
தற்போது நாட்டில் நிலவிவரும் பொய்வதந்திகள், வெறுப்புபேச்சு, இனங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் மற்றும் நாடுகளிடையே நிலவும் பல்வகைபோட்டிகள் ;சம்மந்தமாக தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பும் சமய நல்லிணக்க குழுவின் கலந்துரையாடல் மற்றும் அனுபவ பகிர்வும் அம்;பாரை மாவட்ட சமய நல்லிணக்க குழுவின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சொன்ட் அலுவலக கட்டடத்தில் நேற்று(07) நடைபெற்றது.
சொன்ட் அமைப்பின் ஸ்தாபகரும் சமய நல்லிணக்க பேரவையை முன்கொண்டு செல்பவருமான எஸ்.செந்தூர்ராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய ரன்முத்துகல சங்ககரரெத்தின தேரர், அருட்தந்தை நாலக பொன்சேகா, மௌவி ஏ.ஏ.அஸ்வர் உள்ளிட்ட சமய பெரியார்களும் பல்சமூகப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இலங்கை தேசிய சமாதான பேரவையினை வழிநடத்தும் எஸ்.செந்தூர்ராஜா கலந்து கொண்டு நல்லிணக்கம் தொடர்பான கருத்தினையும் அதற்கெதிரான கருத்துக்களை மாவட்ட சமாதான சபை எதிர்ப்பதாகவும் இலங்கையில் அம்பாரை மாவட்ட சமாதான சபை முன்மாதிரியாக செயற்படவேண்டும் எனவும் கூறினார்.
தொடர்ந்து சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும் வணக்கத்துக்குரிய ரன்முத்துகல சங்ககரரெத்தின தேரர், அருட்தந்தை நாலக பொன்சேகா, மௌவி ஏ.ஏ.அஸ்வர் ஆகியோரும் கருத்துக்களை முன்வைத்தனர்.
சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கிடையிலே புரிதல்களை ஏற்படுத்தும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் இனங்களுக்கிடையே உறவை வளர்க்கும் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
விசேடமாக இன்று நாட்டிலே நடைபெறவுள்ள தேர்தல் மற்றும்; மாற்றங்கள் தொடர்பிலும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் மூவின மக்களும் பல கருத்துக்களை முன்வைத்தனர்.
நிறைவினில் புனித குர்ஆனின் பிரதிகள் மௌவி ஒருவரால் சமய நல்லிணக்க பேரவையை முன்கொண்டு செல்பவரான எஸ்.செந்தூர்ராஜா மற்றும் வணக்கத்துக்குரிய ரன்முத்துகல சங்ககரரெத்தின தேரர், அருட்தந்தை நாலக பொன்சேகா ஆகியோருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.