இலங்கை
கொரோனா அச்சம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அவர்களில் 210 கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான கைதி ஒருவர் நேற்று அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெணிய தெரிவித்துள்ளார்.