ஆலையடிவேம்பு
சின்னப்பனங்காடு பிரிவில் சிறிய வீடொன்று நேற்றிரவு வீசிய பலத்த காற்றால் சேதம்!!!

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னப்பனங்காடு பிரிவில் உள்ள சிறிய வீடொன்று நேற்றிரவு வீசிய பலத்த காற்றால் சேதமாக்கப்பட்டுள்ளது.

சின்னப்பனங்காடு நாககாளி ஆலய வீதியில் வாழும் வருமானம் குறைந்த தாயொருவரின் வீடே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடைபெற்றபோது தனியாக வாழ்ந்துவரும் குறித்த தாய் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் அப்போது பலத்த காற்று வீசிய நிலையில் பாரிய சத்தம் தனக்கு கேட்டதாகவும் அத்தாய் கூறினார்.
இதனையடுத்து அவர் வீட்டை விட்டு உடன் வெளியே வந்து பார்த்தபோதே வீட்டின் மேற்கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதை அவதானித்தாகவும் குறிப்பிட்டார்.
14 வருடம் இப்பகுதியில் கஸ்டத்தின் மத்தியில் அப்பம் சுட்டு வாழ்ந்து வருவதாகவும் ஆகவே யாராவது முன்வந்து தனக்கொரு வீட்டை பெற்றுக்கொடுக்க முன்வருமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் அவரது வளாகத்தினுள் நில மட்டத்துடன் கூடிய கிணறொன்றும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

