இலங்கை

இலங்கையில் ஓய்வூதியத்தை இழக்கும் 32 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!

கடந்த அரசாங்கத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 32 உறுப்பினர்கள் அவர்களுக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 5 வருட காலங்கள் பூர்த்தி செய்யாதவர்களே இவ்வாறு ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ஓய்வூதியம் பெற தகுதி பெற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து 5 வருடங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க வேண்டிய கட்டாயமாகும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகள் மற்றும் தேசிய பட்டியலில் புதிய உறுப்பினர்களாக பலர் தெரிவாகிய நிலையில், அவர்கள் 4 வருடங்களும் 8 மாதங்களுமே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளனர்.

எனவே கடந்த நாடாளுமன்றத்தை முதல் முறையாக பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் 5 வருடங்கள் அவர்களால் நாடாளுமன்றத்தை முழுமைப்படுத்த முடியாமல் போயுள்ளது.

5 வருடங்கள் முழுமையாக நாடாளுமன்ற உறுப்பிராக செயற்பட்டவர்களுக்கு உறுப்பினர் பதவியின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதி ஓய்வூதியமாக கிடைக்கும்.

அவ்வாறு ஓய்வூதியம் இழந்தவர்களில் அதிகமானவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாகும். அவர்களின் எண்ணிக்கை 23ஆகும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 4 பேரும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரும் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய மலிக் சமரவிக்ரம, ஹிருணிக்கா பிரேமசந்திர, சதுர சேனாநாயக்க, ஆனந்த அழுத்கமகே, பந்துலால் பண்டாரிகொட, சந்திம கமகே, கருணாரத்ன பரணவித்தான,

தயா கமகே, அஷு மாரசிங்க, சமன் ரத்னபிரிய, நடராஜா திலகேஷ், எஸ்.வேலுகுமார், மொஹமட் மன்சூர், சிசிர குமார, ரஹ்மான் இஸ்னாத், நாலக கொலொன்னே, துசிதா விஜேமான்த, சந்தித் சமரசிங்க, எம.நவாவி, எம்.சமல்மன், ஏ.ஹசிப் ஆகிய உறுப்பினர்களே இவ்வாறு ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்னவும் ஓய்வூதியத்தை இழந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிணயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, மனோஜ் சிறிசேன மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினரான மிலத் ஜயதிலக்க ஆகியோரும் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாமையினால் அவர்களும் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் நலிந்த ஜயதிஸ்ஸவும் ஒய்வூதியத்தை இழந்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் சிவபிரகாஷம் சிவமோகன், கவிந்திரன் கோடீஸ்வரன், ஈஸ்வரன் சரவணபவன் ஆகியோரும் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker