இலங்கை
அனுமதி பெறாது திருமணநிகழ்வை ஏற்பாடு செய்த மண்டபத்திற்கு சீல்!

சுகாதாரத் தரப்பினரின் அனுமதி பெறாது திருமண நிகழ்வை ஒழுங்கு செய்த மண்டபம் ஒன்று சுகாதாரத் தரப்பினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.வடமராட்சி, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் சுகாதாரப் பகுதியினர் அனுமதி பெறாமல் நேற்று புதன்கிழமை(31) திருமண நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந் நிகழ்வில் 400 ற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதுதொடர்பாக கரவெட்டி சுகாதாரப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அப்பகுதிக்கு சென்ற சுகாதாரப் பகுதியினர் திருமண மண்டபத்தின் முன்கதவை சீல்
வைத்து மூடினர்.
எனினும், திருமண நிகழ்வு மணமகன் மற்றும் மணமகளின் நெருக்கமான உறவினர்களுடனும், படப்பிடிப்பாளர்களுடனும் திருமணம் நடைபெற்றது.