பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் ப்ரில்லியன்ட் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் சம்மாந்துறை ப்ரில்லியன்ட் பாலர் பாடசாலைக்குத் தேவையான கதிரைகள், மேசைகள் மற்றும் அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவரும் இளம் விஞ்ஞானியுமான வினோஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பாலர் பாடசாலைகளுக்குத் தேவையான ரூபா 64,660 பெறுமதியான 25 கதிரைகள், 10 மேசைகள் மற்றும் அத்தியாவசிய கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வை பாலர் பாடசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சர்ஜீன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.
மக்களுக்கு யோகாக் கலையின் உண்மைகளை உணர்த்த சைவ முன்னேற்றச் சங்கத்தின் மற்றுமொரு சேவையே அறிவொளி வளையம் என்பது குறிப்பிடத்தக்கது.