இலங்கை

இலங்கையின் பாரம்பரிய ஆடைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் 4 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பதால் ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் சிறப்புவாய்ந்தவை.

இதில் அணியப்படும் ஆடை, உணவு என எல்லாமே மிகவும் பெறுமதியானதாக இருப்பதோடு பேசுபொருளாகவும் மாறும்.

பங்குபற்றும் அனைத்து வீரர்களும், தங்களது நாட்டை பிரதிபலித்து இருப்பர், இதற்கமைய, இவ்வருட ஒலிம்பிக் விழாவில் இலங்கைக்கு உயர் அங்கீகாரமொன்று கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு, விளையாட்டு வீரர்கள் முதன்முதலாக வெளிப்புற திறப்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக விளையாட்டுகளை நடத்துவதற்கு ஈபிள் கோபுரத்தின் முன் சீன் வழியாக பயணம் செய்யும் போது, ​​உலகின் அனைத்து கலாச்சாரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட 11 ஆடைகளில் இலங்கைக்கு 3ஆம் இடம் கிடைத்துள்ளது.

இதில் முதலிடத்தை மங்கோலியா நாடு பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மெக்சிகோ, மூன்றாவது இடத்தை இலங்கை , நான்காவது இடத்தை கனடா, ஐந்தாவது இடத்தில் அயர்லாந்து, ஆறாவது இடத்தை ஹைட்டி, ஏழாவது இடத்தை அமெரிக்கா, எட்டாவது இடத்தில் செக் குடியரசு, ஒன்பதாவது இடத்தை குவாத்தமாலா, பத்தாவது இடத்தை கிரேட் பிரிட்டன், 11வது இடத்தை மலேசியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker