மஹிந்தவை யாரும் நெருங்க முடியாது! ஜனாதிபதி கோட்டாபய சூளுரை!


ராஜபக்ச குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த பல்வேறு நபர்கள் முயற்சித்து வந்தாலும் ராஜபக்ச குடும்பம் என்பது அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய குடும்பம் அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாணசபை பிரதிநிதிகள் ஒன்றியத்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச என்பவர், எமது நாட்டில் மாத்திரமல்ல, நான் நினைக்கின்றேன் முழு ஆசியாவையும் எடுத்துக் கொண்டால், அவரே சிரேஷ்ட தலைவர் என்பது எமக்கு தெரியும்.
அவர் அரசியல் அனுபவமிக்கவர். அவரது தலைமைத்துவத்திடம் எந்த தலைவரும் நெருங்க முடியாது.
இப்படியான தலைவர் கட்சிக்கு தலைமை தாங்கும் போது நாட்டை முன்னெடுத்துச் செல்ல எனக்கு மிகப் பெரியது உதவியாக இருக்கின்றது.
எமது வெற்றியில் பிரதான சாதகம் மகிந்த ராஜபக்ச என்ற கதாபாத்திரம் தான்.
அத்துடன் பசில் ராஜபக்ச கட்சியை உருவாக்கி, அரசாங்கத்தை ஏற்படுத்தவும் வெற்றியை பெறும் சூழ்நிலையையும் நாட்டில் உருவாக்கினார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இப்படியான இரண்டு தலைவர்களுடன் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல எனக்கு மிகவும் இலகுவாக இருக்கின்றது.
இவர்கள் இருவருடனே அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.



