இலங்கை
		
	
	
மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளும் அக்கரைப்பற்று மத்திய பஸ் தரிப்பிட நிலையத்திலிருந்து ;ஆரம்பிக்கப்பட்டன.

வி.சுகிர்தகுமார்
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்தில் போக்குவரத்து சேவைகள் நேற்று (26)வழமைக்கு திரும்பியது.
கடந்த சில நாட்களாக மாவட்ட மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பஸ் சேவைகள் நேற்று தினம் வழமைபோல் இடம்பெற்றன.
இதன் அடிப்படையில் மாகாணங்களுக்கிடையிலான சேவைகளும் அக்கரைப்பற்று மத்திய பஸ் தரிப்பிட நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டன.
போக்குவரத்து சேவையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுடன் தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபட்டதை காண முடிந்தது.
பஸ்சில் பயணிக்கும் அதிகமான மக்கள் சுகாதார நடைமுறையைப் பின்பற்றினாலும் கூட ஒரு சிலர் அதில் கவனம் செலுத்தாததையும் அவதானிக்க முடிந்தது.
இதேநேரம் அதிகளவான பயணிகள் பஸ் தரிப்பிட நிலையத்தில் காத்திருந்தமையும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



				
					


