”கொவிட்- 19 விடுமுறைக்கால மாணவர் கல்வி மேன்பாட்டுத்திட்டம்” இன்று முதல் பிரதேச மாணவர்களுக்கு…..

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேன்படுத்துவதற்காக ”கொவிட்- 19 விடுமுறைக்கால மாணவர் கல்வி மேன்பாட்டுத்திட்டம்” எனும் எண்ணக்கருவில் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படும் அதிசிறந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கை மாதிரி வினாத்தாள்களை மாணவர்களுக்கு வீட்டில் இருந்தவாறே பயிச்சியினை மேற்கொள்வதற்காக வழங்கும் செயற்பாடானது.
குறித்த செயற்பாடானது இன்றைய தினம் (06) முதற்கட்டமாக google Forms எனும் இணைய செயலி துணையுடன் மாணவர்களுக்கு சென்றடையக்கூடியவாறு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் இந்த குறித்த செயற்பாடானது மாறுபட்ட விதங்களில் முழுமையான வினாப்பத்திரம் ஆகவும் மற்றும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது போன்று சிறு சிறு தொகுப்புக்கள் ஆகவும் மாணவர்களுக்கு இலகுவில் சென்றடையக்கூடியவாறு வெளிவர இருக்கின்றது.
”கொவிட்- 19 விடுமுறைக்கால மாணவர் கல்வி மேன்பாட்டுத்திட்டம்” என்னும் செயற்பாடானது Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழுவினரினால் N.சுதாகரன் ( திருக்கோவில் வலயக் கல்வி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர்) மற்றும் P.பரமதயாளன் (திருக்கோவில் வலயக் கல்வி ஆரம்ப பிரிவுக்கான உதவிக்கல்வி பணிப்பாளர்) அவர்களின் ஆலோசனையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.