விளையாட்டு
இரண்டாம் இடத்தை தனதாக்கிய இலங்கை

தெற்காசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் டாக்காவில் உள்ள ஷாஹீத் சுஹ்ரவர்தி உள்விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் ஆரம்பமானது.
இலங்கை, மாலைத்தீவு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் என நான்கு நாடுகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்தியா அணி 6 ஆவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.
அதனடிப்படையில் இலங்கை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.