இலங்கை

சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே தற்கொலைகளை தடுக்க முடியும் – யமுனா நந்தா

சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார்

உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இன்றைய தினம்  உலக தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு தினமாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது அதே போலவே  இன்றைய தினம் நாமும் தற்கொலை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது

பொதுவாக தற்கொலையானது உலகில் அதிகரித்துச் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது

ஆண்டுதோறும்  80 ஆயிரம்பேர் உலகிலே தற்கொலை செய்கிறார்கள் சுமார் 20 மில்லியன் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் அந்த வகையில் ஒரு செக்கனுக்கு 6 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் 40 செக்கனுக்கு ஒருவர் தற்கொலைமூலம் மரணமடைகின்றனர் அதேபோல யாழ்மாவட்டத்திலும் கடந்த வருடம் யாழ் போதனா வைத்தியசாலையில்  615 பேர் தற்கொலை முயற்சி யினால் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலையினால் மரணம் அடைந்திருக்கிறார்கள்

அதேநிலைமை  இவ்வருடமும் காணப்படுகின்றது எனவே தற்கொலை தொடர்பான விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டிய தேவை மிகவும் அவசியமானது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மாத்திரமில்லாமல் ஏனைய வைத்தியசாலைகளிலும் தற்கொலை முயற்சி மேற்கொள்வோர்  பலர்  சிகிச்சைக்கு வருவதில்லை

எனவே தற்கொலை ஏன் ஏற்படுகின்றது தடுப்பது பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானதாகும் தற்கொலை குறிப்பாக நான்கு வகையாக காணப்படுகின்றது முதலாவது உள சார்பு  நோயுடையவர்கள் ,,மனச்சோர்வு நோய் உடையவர்கள் சமூக உளதாக்கங்கள் காரணமாக இளவயதினர் நெருக்கடிகள் ஏற்படுவோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்

பொதுவாக உயர்தர சாதாரண பரிட்சையில் தோற்றுபவர்கள்மற்றும் பல்கலைக்கழக பரீட்சைக்கு தோற்றியவர்களும்  இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்

இளவயது தற்கொலைகள் 15 தொடக்கம் 30 வயதினரிடையே காணப்படுகின்றது இந்த இளைஞர்களின் இறப்பிற்கு தற்கொலை ஒரு முக்கியமான காரணமாக அமைகின்றது சிறு பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்படும் மாற்றம் ,காதல் தோல்வி ஒரு குற்ற உணர்வுகள் ஏற்படும் போது தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் இவற்றைதடுக்க  உளவளத்துணை மிகவும் அவசியமானது

எமது சமூக கட்டமைப்பில் மக்கள் மற்றவர்களுடன் பொருளாதாரரீதியாக மாத்திரமே தொடர்புகளை  வைத்துள்ளார்கள் கலாச்சார உறவுகளோ ஏனைய  தொடர்புகளை பேணவோ நேரங்கள் காணாது காணப்படுகின்றது

நெருக்கமான நேர கட்டமைப்பில் வாழும்போது நெருக்கீடு வரும்போது அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு யாரும் இல்லை அதனால் அவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் குறிப்பாக குடும்பத்தில் கணவன் போதை வஸ்த்து பாவிப்பவராக இருந்தால் வீட்டில் வந்து பிரச்சனை கொடுக்கும் போது மனைவி தனக்கு ஒரு முடிவு தெரியவில்லை என தற்கொலை செய்வதோடுதனது பிள்ளைகளையும் சேர்த்துக செய்து தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்

அப்படியான முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் சிகிச்சைக்காக வந்துள்ளார்கள் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க  விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே எமது பிரதேசத்தில் தற்கொலை முயற்சிகளை நிறுத்த முடியும்

தற்கொலை யுத்த காலத்திலும்  காணப்பட்டது அவர்கள் இலட்சிய நோக்கத்திற்காக தற்கொலை புரிந்தி ருக்கின்றார்கள் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இந்த தற்கொலைக்கான காரணமாக எமது சமூக கட்டமைப்பில் உள்ள இடைவெளியே காரணமாகின்றது இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்பினை கல்வி வசதிகளை கொடுப்பதால் அவர்களுடைய மனம்வேறு புலன் களில் செல்வதை தவிர்த்து தற்கொலைகளை தடுக்க லாம் குறிப்பாக தற்கொலை நடக்கின்ற பிரதேசங்களை அவதானிக்கும் போது அதேபிரதேசத்தில் வாழ்கின்ற மக்களே தற்கொலையில் அதிகமாக செய்கின்றார்கள் அந்த பிரதேசங்களுக்கு தேவையான சமூக கட்டமைப்பு பொருளாதார வசதிகளை ஏற்படுத்துவதலேயே தற்கொலையினை குறைக்க முடியும்

ஊடகங்களும் இது தொடர்பில் மிக பொறுப்பாக செயற்படவேண்டும் ஒருவர் தற்கொலை செய்யும் போது தற்கொலை என செய்தி பிரசுரிக்கலாம் ஆனால் எவ்வாறு தற்கொலை செய்தார் என்பதை நீங்கள் பிரசுரிப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அதனை பார்த்து இன்னொருவரும் தற்கொலை செய்ய கூடிய தன்மை காணப்படுகின்றது  அத்துடன் தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளையும் நாங்கள் கட்டுப்படுத்துவதன் மூலம் எமது வடபகுதியில்  தற்கொலையை முடியும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker