ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்

 

  • மேஷம்

    மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். போராடி வெல்லும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

  • கடகம்

    கடகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும் மகிழ்ச்சி பொங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நல்லன நடக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

  • கன்னி

    கன்னி: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவு ஏற்படும். அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • துலாம்

    துலாம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய  வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

  • தனுசு

    தனுசு: இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பணிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மனைவி வழியில் நல்ல செய்திஉண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர் பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்புகூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி புது
    பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker