இலங்கை
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கடந்த காலப்பகுதியில் அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில் அரசாங்கம் மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அதிகாரிகளை இலக்காக கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறிப்பிட்ட உடனடி நடைமுறைகளுக்கு அப்பால் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலைமையை விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதியரசரான ஜகத் பாலபடபெதி தலைமையில் குழு ஒன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் செயலாளராக செற்படுவதற்காக சட்டத்தரணி சுமுது கே. விக்ரமாராச்சியை நியமிப்பதற்காக பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



