ஆன்மீகம்

இன்றைய இராசிபலன் 09/09/2019

உங்களுக்கு இன்றைய நாள் இனியநாளாக அமைய ஆலையடிவேம்பு வெப் இன் வாழ்த்துக்கள்.
2019 புரட்டாசி மாதம் 09 ஆம் திங்கள்
சூரிய உதயம் – மு.ப 06:02
சூரிய அஸ்தமனம் – பி.ப 18:14
ராகு காலம்
பகல் நேரம் 07:33 முதல் 09:05 வரை.
இரவு நேரம் 19:42 முதல் 21:10 வரை.
அதிஷ்ட திசை – கிழக்கு
துரதிஷ்ட திசை – வட மேற்கு

மேஷ ராசி

இன்று தனவாக்கு ஸ்தானாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமான பஞ்சம ஸ்தானத்தில் இருப்பதால் வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.

ரிஷபம் ராசி

இன்று மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். உங்கள் வேலைக்கான திட்டங்களை மிகச் சரியாக வகுத்திக் கொள்வீர்கள். உரிய நேரத்தில் வேலைகளை முடிப்பீர்கள். இதனால் மேலிடத்தின் பாராட்டினைப் பெறுவீர்கள். ஆனாலும் தங்களுடைய சுய சார்பில் இருந்து பின்வாங்க மாட்டீர்கள்.

மிதுனம் ராசி

இன்று ராசிநாதன் புதன் ராசிக்கு தைரிய இடத்தில் இருக்கிறார். அது அவருக்கு நட்பு வீடாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். ஒன்பதாமிடத்தை ராசிநாதன் பார்க்கிறார். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் உறவுமுறை சிறக்கும். தந்தைக்கு மிகச் சிறப்பான காலகட்டமிது.

கடகம் ராசி

இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆனாலும் இளைய சகோதர ஸ்தானத்தில் இருக்கும் ராகுவால் சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

சிம்மம் ராசி

இன்று ராசிநாதன் சூரியன் ஆட்சியாக சஞ்சாரம் செய்கிறார். தனவாக்கு குடும்ப ஸ்தானாதிபதி புதனுடன் சம்பந்தம் பெறுகிறார். எனவே பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

கன்னி ராசி

இன்று நீங்கள் சாதிக்க புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும். உடன் பணிபுரிபவர்கள் மூலம் நன்மைகள் வந்து சேரும்.

துலாம் ராசி

இன்று லாப ஸ்தானத்தில் சூரியன் உலவுவதால் பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும் உருவாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை இருக்கும்.

விருச்சிகம் ராசி

இன்று உத்தியோகஸ்தர்கள் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம். விவசாயம் சார்ந்த கல்வி பயில்பவர்களுக்கு பொன்னான நாள் இது.

தனுசு ராசி

இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் வாழ்வில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராசிநானுடன் கேது நாடிப்படி சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மகரம் ராசி

இன்று தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து வைத்துக் கொள்வது நல்லது. ஆனாலும் ராசிநாதன் சனி கேந்திர சம்பந்தம் பெறுவதால் போட்டிகள் குறையும்.

கும்பம் ராசி

இன்று பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.

மீனம் ராசி

இன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker