உலகம்

இனிமேல் பாலஸ்தீனம் என்ற எதுவும் கிடையாது!

இனி பாலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது எனவும், அந்த நிலம் தங்களுக்கே சொந்தமானது எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று கையெழுத்திட்டதன் பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்””எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு என்றவொன்று இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்” என்று கூறினார்.

இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.

மேற்குக் கரையின் மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிழக்கு ஜெருசலேமிலிருந்து உள்ள பாலஸ்தீனியர்களிடமிருந்து மேற்குக் கரையை முற்றிலுமாகத் துண்டிக்கும்.

சர்வதேச அழுத்தத்தால் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த E-1 திட்ட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது.

பாலஸ்தீனியர்களுக்காக பிரத்தியேகமாக வடக்கு மற்றும் தெற்கு மேற்குக் கரைகளை இணைக்கும் சாலையை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் இதன் மூலம் தொடங்கியது.

இது பாலஸ்தீனியர்கள் பிரதான நெடுஞ்சாலையில் நுழைவதைத் தடுக்கும். தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker