இலங்கை
விருப்பு வாக்கு சாதனையை மீண்டும் தற்காத்து கொள்வரா முன்னாள் பிரதமர் ரணில்?
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
UNPயின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாது தேசிய பட்டியல் மூலம் பாரளுமன்றத்திற்கு வருமாறு அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாது அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்துள்ளளார்.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்ற அரசியல்வாதிகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருந்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் 5 லட்சத்தி 566 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
எனினும் 2020ம் ஆண்டாகும் போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட நிலைமைகளுக்கு அமைய அவரது பிரபலம் குறைந்து போயுள்ளது.
இதனால் இம்முறை ரணில் விக்ரமசிங்க தனது விருப்பு வாக்கு சாதனைக்கு அருகில் கூட வர முடியாதென்றும், அவர் கடந்த முறை பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும் போது குறைந்த விருப்பு வாக்கையே பெற முடியும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக தனது விருப்பு வாக்கு சாதனையை பாதுகாத்து இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாது தேசிய பட்டியல் மூலம் பாரளுமன்றத்திற்கு வருமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான பாரளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் தனது பிடிவாத கொள்கையில் எவர் கூறுவதையும் கேட்காது மீண்டும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் குறுகிய காலத்தில் அதிகமாக பிரபலத்தை இழந்த முன்னாள் பிரதமர் என்ற சாதனையை நிலைநாட்டும் சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்க உருவாக்கிக் கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.



