இலங்கை
மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய மகாகும்பாபிஷேக நிகழ்வின் 1008 சங்காபிஷேக (நவோத்ர) பூசைகள் நாளை….

-சி.காந்தன்-
மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய பிரதிஷ்டா அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ கும்பாபிஷேக நிகழ்வு (15.07.2021) வியாழக்கிழமை எண்ணெய்க்காப்பு நிகழ்வுடன் ஆரம்பமாகி (16.07.2021) வெள்ளிக்கிழமை மகாகும்பாபிஷேகம் இடம்பெற்று மண்டலாபிஷேக பூசைகள் தினம்தோறும் மாலை 5.00 மணியளவில் ஆரம்பமாகி அன்னதானம் வழங்களுடன் நிறைவுற்று வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் (26.07.2021) திங்கட்கிழமை மண்டலாபிஷேக பூசை உபாயகாரர் இராசையா குடும்பத்தினரினால் இடம்பெற்று வருகின்றது. மேலும் நாளைய தினம் (27.07.2021) செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணியளவில் 1008 சங்காபிஷேகம் (நவோத்ர) பூசைகள் இடம்பெற இருக்கின்றது.