இலங்கை
பஹன்துடாவ சம்பவத்துடன் தொடர்பில்லாத புகைப்படம் தொடர்பில் விசாரணை

பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்பு படுத்தி அதில் சம்பந்தப்படாத தம்பதியினரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் குறித்த புகைப்படத்தில் உள்ள குறித்த சம்பவத்துடன் தொடபில்லாத தம்பதியினால் குறித்த கோரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தம்பதி பாதிக்கப்பட்டிருந்தால் அவ்வாறு செய்தவர்களை தேடி உடனடியாக விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆலோசனை வழங்கியுள்ளார்.