வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?- முடக்கப்பட்டுள்ள மற்றுமொரு பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர் முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் இன்றி வாழ்வதற்கு மிகவும் சிரமப்படுவதாக கூறி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு – 15 மோதரையின் ‘மெத்சந்த செவன’ தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் இவ்வாறு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளதாவதுஇ ‘ எங்களது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால்இவாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்இ பொருளாதார பிரச்சினைகளும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கி வருகிற போதிலும்இ அத்தொகையைக் கொண்டு ஒரு மாதத்திற்கு மேல் எவ்வாறு வாழ்வது’ என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளைநேற்றைய தினம்இ கொழும்பு- 15 மோதரை – இக்பாவத்த பகுதியை சேர்ந்த மக்களும் இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.