இத்தாலியில் சாலையோரங்களில் வீசியெறியப்படதாக வெளியான புகைப்படங்கள் உண்மை என்ன????

இத்தாலியில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அந்த நாட்டு மக்கள், மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் பணங்களை உறவினர்கள் வீதியோரங்களில் வீசியெறிந்து சென்றதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் இதன் உண்மைத்தன்மை தெரியவந்துள்ளது.
தற்பொழுது உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இத்தாலியை கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதுவரையில் இத்தாலியில் 13155 உயிர்களை பலிகொடுத்துள்ளது.
இன் நிலையில், இத்தாலி குறித்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது அதாவது இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள் பணங்களை வீதிகளில் வீசியெறிந்ததாக கூறி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களி வைரலாக்கப்பட்டுவருகின்றது.
அனால் இது முற்றிலும் பொய்யான தகவலாகும். இத்தாலியில் உள்ள மக்கள் எவரும் பணத்தை வீசியெறியவில்லை.
அந்த புகைப்படங்கள் யாவும் கடந்த மார்ச் மாதம் வெனிசுலாவின் மெரிடா நகரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். அப்பகுதியில் உள்ள வங்கியொன்றை கொள்ளையடித்த கொள்ளையர்கள். பனமதிப்பிழப்பு செய்யப்பட்ட செல்லாத அதாவது பாவனையில் இல்லாத பணத்தை வீசியெறிந்து சென்ற புகைப்படங்களாகும்.
அந்த புகைப்படங்களே தற்போது “இத்தாலி மக்களால் வீசியெறியப்பட்ட பணம்” என்று அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.