மற்றுமொரு ஆசிய நாட்டிற்குள் புகுந்த கொடிய கொரோனா.!! வசமாக சிக்கிக் கொண்ட 25,000 இலங்கையர்கள்..!!

கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் 52 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதன்படி, அந்நாட்டில் தற்போது 156 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் முதலாவது மரணமும் பதிவாகியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தென் கொரியாவிற்கு தொழில் நிமித்தம் மற்றும் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு சுமார் 25 ஆயிரம் இலங்கையர்கள் தங்கியுள்ளதாக அந்நாட்டு இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.அதன்படி, வைரஸ் பரவல் தொடர்பில் இலங்கையர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூதரகத்தின் தொழிலாளர் நல ஆலோசகர் செனரத் யாபா தெரிவித்தார்.