
ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/கண்ணகி வித்தியாலயம் பாடசாலையில் 06 வருடங்கள் திறன்பட கடமையாற்றி நாளைய தினம் (23) கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் த.இராசநாதன் அதிபருக்கு சேவை நலன் பாராட்டு விழா இன்றைய தினம் (22) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், கண்ணகிராம சமூக மட்ட அமைப்புக்கள் இணைந்து நினைவுச்சின்னம் வழங்கி வாழ்த்தி கௌரவித்திருந்தனர்.