திருக்கோவில் மண்டானை பகுதியை சேர்ந்த முதலை தாக்குதலுக்கு இலக்காகியவரின் குடும்பத்திற்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் விலங்கு தாக்குதல் நஷ்டஈடு வழங்கி வைப்பு..

ஜே.கே.யதுர்ஷன்
சாகாமம் தாலிபோட்டாறு ஆற்றில் பகுதியில் கடந்த 2022/01/01ஆம் திகதி மீன்பிடிக்கும் வேளை முதலை தாக்குதலுக்கு இலக்காகி மரணம் அடைந்த திருக்கோவில் 04ம் குடிநிலம் பகுதியை சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்த்தி என்பவரின் குடுபத்திற்கு ஆரம்ப கட்ட மரணச் செலவு தொகையான அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் விலங்கு தாக்குதல் நஷ்டஈடு கொடுப்பனவினை திருக்கோவில் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்து உத்தியோத்தர் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவையாளர் நிறுவாக உத்தியோகத்தர் மற்றும் அப் பகுதி கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் அவரது மனைவியிடம் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கி வைத்தனர்.
இன் நிகழ்வானது இன்றைய தினம் 2022/01/10 தினம் திருக்கோவில் 04 குடிநிலம் பகுதியில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக கிராமசேவையாளர் நிறுவாக உத்தியோத்தர் திரு.கந்தசாமி, அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், த.தனராஜன் பகுதி கிராம உத்தியோகத்தர்,திரு.பார்த்தீபன், கிராம அபிவிருத்தி உத்தியோத்தர் திரு.முரளி ஆகியோர் இணைந்து இவ் அனர்த்த நிவாரண நஷ்டஈடு நிதியினை வழங்கி வைத்தனர்.