மகாசக்தி சி.க.கூ.சங்க பெரும் போக விவசாயக் கடன் ஆலையடிவேம்பு பிரதேச மகாசக்தி சங்க விவசாயப் பயிர்செய்கை மேற்கொள்ளும் 120 அங்கத்தவர்களுக்கு வழங்கிவைப்பு…..

வரைவுள்ள மகாசக்தி சி. க. கூ.சங்கத்தினால் இன்று (04.11.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேசத்தவர்களுக்கு பெரும் போக விவசாயக் கடன் வழங்கும் நிகழ்வு சங்க உபதலைவர் – திரு. க. நவரத்தினம் அவர்கள் தலைமையில் மகாசக்தி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு தலைமைக்காரியாலய கூ. அ. உத்தியோகத்தர் (அபிவிருத்தி) கல்முனை ஜனாப் M.I.M. பரீட் அவர்கள் பிரதம அதிதியாகவும், சங்கத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கல்முனை திரு.கே.காந்தரூபன் அவர்கள் விசேட அதிதியாகவும் மற்றும் சங்க பொது முகாமையாளரும் செயலாளருமான திரு.ச.திலகராஜன், பொருளாளர் திருமதி.க.தர்சினி, சங்க இயக்குனர் சபை உறுப்பினர்களான செல்வி.சி.மோகனா, திருமதி.சு.துஸ்யந்தி, திருமதி.ப.நவநீதா அவர்கள் கெளரவ அதிதிகளாகவும், அறிவிப்பாளராக திரு.சி.பாக்கியராசா அவர்களும் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மகாசக்தி சி.க.கூ.சங்க பெரும் போக விவசாயக் கடன் வழங்கலானது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வசிக்கும் மகாசக்தி சங்க விவசாயப் பயிர்செய்கை மேற்கொள்ளும் 120 அங்கத்தவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் – திருமதி. பிரியா கங்கா (தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்)