ஆலையடிவேம்பைச்சேர்ந்த தந்தை வைத்தியசாலையில் படுத்த படுக்கையாக இருக்கும் 3 குழந்தைகளை உடைய குடும்பத்திற்கு “அறம் வழி அறக்கட்டளை” அமைப்பினரின் உதவி….

அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பில் வசிக்கும் 3 குழந்தைகளின் (தரம் 7, தரம் 2, கைக்குழந்தை) தந்தை மேசன் வேலை செய்யும் போது மதில் சுவர் காலில் விழுந்து படுத்த படுக்கையாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணப்படுகின்றார் இவரது உழைப்பை நம்பி வாழ்ந்துவந்த அந்தக்குடும்பத்தின் நிலையை அறிந்துகொண்டு அவர்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுத்த அறம் வழி அறக்கட்டளை அமைப்பினருக்கும் மற்றும் அதன் பணிப்பாளர் அபிராஞ் ரத்னவேல் அவர்களுக்கும் எமது ஆலையடிவேம்புவெப் இணையக்குழு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் அந்த குடும்பத்துக்கான வாழ்வாதார உதவியாக அரிசி விற்பனை செய்வதற்காக அரிசி மற்றும் பாடசாலை செல்லும் இரண்டு குழந்தைகளுக்கு எதிர் வரும் வருடத்திற்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் என 25,000/- பெறுமதி மிக்க பொருட்கள் அறம் வழி அறக்கட்டளை அமைப்பினரால் இன்றய தினம் வழங்கிவைக்கப்பட்டது.