ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் “கூட்டுறவு நுகர்வோர் விற்பனை நிலையம்” இன்று (11) அக்கரைப்பற்று, சாகம வீதியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் “கூட்டுறவு நுகர்வோர் விற்பனை நிலையம்” இன்று (11) அக்கரைப்பற்று, சாகம வீதியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான பொ. தனேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.
இதன் போது முன்னாள் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.வேல்வேந்தன், தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.ஜலால்டீன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் அங்கத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம் நுகர்ச்சிப் பிரிவை ஆரம்பித்திருப்பது விசேட அம்சமாகும்.