இலங்கை
அக்கரைப்பற்று தொற்கு ப.நோ.கூட்டுறவு திருக்கோவில் தம்பிலுவில் சங்கத்தினரால் மிக குறைந்த விலையில் அங்கர் பால்மா வழங்கும் திட்டம்….

-ஜே.கே.யதுர்ஷன்-
அக்கரைப்பற்று தெற்கு ப.நோ. கூட்டுறவு திருக்கோவில் தம்பிலுவில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (25) ப.நோ. கூட்டுறவு சங்கத்தில் சில்லறை விற்பனை நிலையத்தில் அங்கர் பால்மா (400g)-380.00 மிக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த திட்டத்திற்கு அமைய பால்மாவை பெற்றுக்கொள்ள திருக்கோவில் பிரதேசத்தில் பல பாகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து பெற்றுக்கொண்டதுடன்.
குறித்த செயற்பாடுகள் சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இடம் பெற்றதுடன் மேலும் இவ் விற்பனை செயற்பாடு திட்டமானது நாளைய தினம் (26) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதுவும் குறிப்பிடத்தக்கது.