உலகம்

சீனாவைத் தாக்கிய லெகிமா சூறாவளி 33 பேர் பலி

சீனாவை தாக்­கிய லெகிமா சூறா­வ­ளியில் சிக்கி குறைந்­தது 22 பேர் பலி­யான­துடன் மேலும் பலர் காணாமல் ­போ­யுள்­ளனர்.

அத்­துடன் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் தமது வீடு­வா­சல்­களை விட்டு வெளியேறும் நிர்ப்­பந்­தத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளனர். சூறா­வ­ளியின் விளை­வாக இடம்­பெற்ற மண்­ச­ரிவின் கார­ண­மா­கவே உயி­ரி­ழப்­புகள் இடம்­பெற்­றுள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

இந்த சூறா­வ­ளியால்  தாய்­வானுக் கும் சீனாவின் ஷங்காய் நக­ருக்­குமி ­டை­யி­லுள்ள வென்லிங் பிராந்­தி­யத் தில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை கடும் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்ளது.

இந்­நி­லையில் வெள்ளத்தில் சிக்­கிய வாக­னங்­க­ளிலும் இடிந்து விழுந்த கட்­டி­டங்­களின் இடி­பா­டு­களின் கீழும் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணியில் மீட்புப் பணி­யா­ளர்கள் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளனர்.

இந்த சூறா­வளி கார­ண­மாக 1,000 க்கு மேற்­பட்ட விமா­ன­சே­வைகள் மற்றும் புகை­யி­ரத சேவைகள் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளன. அத்­துடன் ஷங்காய் டிஸ்­னி­லாண்ட்டும் மூடப்­பட்­டுள்­ளது.

இந்த சூறா­வளி தற்­போது பல­மி­ழந்து வரு­கின்ற போதும் அதனால் பாரிய வெ ள்ள அனர்த்தம் இடம்­பெறும் அபாயம் தொடர்ந்து உள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

இந்த சூறா­வளி அனர்­த்­தத்­தை­யொட்டி ஷங்­கா­யி­லி­ருந்து 250,000 பேரும் ஸெஜி யாங் மாகா­ணத்­தி­லி­ருந்து 800,000 பேரும் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

அத்­துடன்  அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள 2.7 மில்­லியன் வீடு­க­ளுக்­கான மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய 9 ஆவது சூறாவளியாக விளங்கும் லெகிமா சூறாவளி கடந்த பல ஆண்டுகள் காலப் பகுதியில் தாக்கிய ஏனைய சூறாவளிகளுடன் ஒப்பிடுகையில் பலம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker